ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி மகாநாயக்கர் ஜனாதிபதிக்கு கடிதம்

314 0

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரருக்கு விடுதலை பெற்றுத் தருமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சியம் பீடத்தின் கோட்டே பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அப்பிரிவின் மகாநாயக்கர் கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார தேரரின் கையொப்பத்துடன் வெளியான கடிதத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்த குற்றத்தை உணர்ந்து திருந்தி வாழ்வதற்கு ஞானசார தேரர் உடன்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் மகாநாயக்க தேரர் நினைவு கூர்ந்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் நத்தார் தினத்தில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின்படி விடுதலை செய்யப்படவுள்ள கைதிகளுடன் ஞானசார தேரருக்கும் விடுதலை வழங்குமாறும் அக்கடிதத்தில் மகாநாயக்க தேரர் கேட்டுள்ளார்.

ஞானசார தேரர் செய்த குற்றத்துக்கு அவரது தனிப்பட்ட நோக்கம் எதுவும் காரணமாக அமையவில்லையெனவும், இராணுவ புலனாய்வுத் துறை உறுப்பினர்களுக்காக ஏற்பட்ட உணர்வினால் தேரர் இருந்த இடத்தை புரிந்துகொள்ளாமல் இடம்பெற்ற தவறு எனவும் மகாநாயக்க தேரர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a comment