நீர்வேலி இரட்டைக் கொலை – தீர்ப்பு நாளை

463 0

low-crime_-300x200நீர்வேலி இரட்டைக் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை அறிவிக்கப்படவுள்ளது.

இந்த வழக்கு இன்று யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, ஏற்கனவே முடிவுற்றுள்ள சாட்சியங்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் அரச சட்டத்தரணி மற்றும் எதிர்த்தரப்பு சட்டத்தரணி ஆகியோர் தமது தொகுப்புரைகளை முன்வைத்தனர்.

அவற்றை ஆராயந்த நீதிபதி இளஞ்செழியன் இந்த வழக்கின் தீர்ப்பை நாளை அறிவிப்பதாக தெரிவித்தார்.

சகோதரியையும் மைத்துனைனயும் கொலை செய்ததுடன் மருமகனைக் காயப்படுத்தி கொலை செய்ய முயற்சி செய்ததாகக் குற்றம் சுமத்தப்படுபம் ஒருவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் இந்த  வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நீர்வேலி மேற்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த இரட்டை கொலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.