வலி.வடக்கு மக்கள் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி அமைதிப்பேரணி

458 0

IMG_4137-300x200-720x480-720x480மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை மக்கள் அமைதிப்போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளனர். இன்று காலை 9 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயமுன்றலில் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து இந்த அமைதிப்பேரணியை நடத்தவுள்ளனர்.

மயிலிட்டி மீள்குடியேற்ற குழு, மயிலிட்டி மீன்பிடி கூட்டுறவு சங்கமும், நிலன்புரி நிலையத்தின் அமைப்புக்களும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் குணபாலசிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை மயிலிட்டியை சேர்ந்த 3 கிராமசேவகர் பிரிவு மக்களும், பலாலியை சேர்ந்த 5 கிரமசேவகர் பிரிவு மக்களும், தையிட்டியை சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவு மக்களும், காங்கேசன்துறையை சேர்ந்த 3 கிராமசேவகர் பிரிவை சேர்ந்த மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் 26 வருடகாலமாக நலன்புரி நிலையங்கள், மற்றும் உறவினர்கள் வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

மயிலிட்டி, பலாலி, ஊரணி, தையிட்டியை சேர்ந்த 6 ஆயிரம் குடும்பங்கள்,  மீள்குடியேற்றம் செய்யபப்டவுள்ளன.

எனினும் மோதலின்போது இடம்பெயர்ந்த 10 ஆயிரம் குடும்பங்கள் இன்னமும் 32 நலன்புரி நிலையங்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

மயிலிட்டி பிரதேசம் விடுவிக்கப்படாதவிடத்து 32 நலன்புரி நிலையங்களும் மூடப்படபோவது இல்லை எனவும் வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் குணபாலசிங்கம் குறிப்பிட்டார்.

இவேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வில் உரையாற்றுகையில், ஆறு மாதங்களில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் மீளக்குடியேற்றப்படுவார்கள் எனக் குறிப்பிட்ட விடயத்தை சுட்டிக்காட்டிய அவர், ஆறு மாதங்கள் கடந்தும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற விடயத்தை ஜனாதிபதிக்கு ஞாபகமூட்டும் வகையிலும், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டங்கள் தொடருமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment