மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு

2794 17

indexமட்டக்களப்பு, ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள ஐயங்கணி ரெட்பானாபுரம் கிராமத்தில் பாழடைந்த வளவொன்றில் இருந்து நேற்று இரவு கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
ரெட்பானாபுரம் வீதியிலுள்ள பாழடைந்த வளவொன்றில் மட்பாண்டம் சூளையிடுவதற்காக மண்பாண்டம் உற்பத்தி செய்யும் பெண்கள் குழியொன்றைத் தோண்டும் போது இந்தக் கைக்குண்டு வெளித் தெரிந்துள்ளது.
உடனடியாக இது தொடர்பில் ஏறாவூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் காவல்துறையினர் ஸ்தலத்திற்கு விரைந்து கைக்குண்டை மீட்டனர்.
இது யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், பயன்படுத்துவதற்காக ஆயததாரிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து ஏறாவூர் காவல்துறையினரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment