அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவிற்கான பிணை நிபந்தனைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்யதிலக இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், சஜின்வாஸ் குணவர்தனவிற்கு, மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் காவல்நிலையத்தில் முன்னிவையாகும் வகையில் பிணை வழங்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பிரதிவாதியின் சார்பாக மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்ககொள்ளப்பட்ட நிலையில், பிணை நிபந்தனைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதன்படி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரகசிய காவல்துறையில் முன்னிலையாகுமாறு சஜின்வாஸ் குணவர்தனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

