கதிர்காமத்திலிருந்து வெலிமடை நோக்கிச் சென்று வேனொன்று இராவண எல்லை என்ற இடத்தில் 24 வது மைல் பகுதியில் பாதையை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் வேனில் பயணித்த சாரதி உட்பட ஒன்பது இளைஞர்கள் படுகாயங்களுக்குள்ளாகி பதுளை, பண்டாரவளை, தியத்தலாவை ஆகிய அரசினர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் பதுளை அரசினர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஐவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏனைய நால்வரில் இருவர் பண்டாரவளை அரசினர் வைத்தியசாலையிலும் இருவர் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த விபத்து குறித்து எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

