கொழும்பின் பாதுகாப்பு அதிகரிப்பு

295 0

பண்டிகை காலங்களில் நாடு தழுவிய ரீதியில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரித்து காணப்பட்ட போதிலும், கொழும்பு நகரின் பாதுகாப்புகள் மேலும் பலப்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

இதன்மூலம் கொழும்பு நகரில் மாத்திரம் இன்று 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வரையில் 2000க்கும் அதிகமான பொலிஸார் கடமைகளில் அமர்த்தப்படவுள்ளனர்.

இவர்கள் பொலிஸ் சீருடையிலும் சிவில் உடையிலும் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர். அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய பகுதிகள் அனைத்தும் குறித்த பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரியின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருதற்கும், கலகம் மற்றும் குற்றச்செயல்களின் ஈடுபடுவோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடிய அதிகாரத்தையும் பொலிஸ்மா அதிபர் பெற்றுக்கொடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது, வீதி போக்குவரத்து பொலிஸாரும் அதிகளவில் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதனுடன் பட்டாசுகளின் பாவனைகளின் போது மிகவும் அவதானமாக செயற்படுமாறும், சிறுவர்கள் பட்டாசு கொளுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment