சிறிசேன கொலை சதி- போதிய ஆதாரங்கள் இல்லை-ரொய்ட்டர்

277 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எவற்றையும் விசாரணையாளர்கள் கண்டுபிடிக்கவில்லை என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது

இது தொடர்பில் சிறிசேனவின் பேச்சாளரிடம் கருத்தினை கோரியவேளை அவர் அதற்கு பதிலளிக்கவில்லை எனவும் ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

சில வாரங்களிற்கு முன்னர் ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் குறித்த விசாரணையில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தீவிர ஆர்வம் காட்டததன் காரணமாகவே அவரை பதவி விலக்கினேன் என சிறிசேன தெரிவித்திருந்தார் என ரொய்ட்டர் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் உள்நாட்டு மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் பல அரசியல் கொலைகள் இடம்பெற்றுள்ளதால் சிறிசேனவின் குற்றச்சாட்டுகள் மிகவும் பாரதூரமானவை எனவும் ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

உண்மை என்னவென்பதை கண்டறிவது கடினமாகவுள்ளது என தெரிவித்துள்ள  மேற்குலக இராஜதந்திரியொருவர் பல சிறிசேனவை கொலை செய்வதற்கான முயற்சி குறித்து தெரிவிக்கப்படுவதை சந்தேகத்துடன் நோக்குகின்றனர் என தெரிவித்தார் என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

கொலை சதி முயற்சி குறித்த தகவலை வெளியிட்ட நாமல் குமாரவிற்கும் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபரிற்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்களில் ஆதாரங்கள் உள்ளதாக  பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர ரொய்ட்டரிற்கு தெரிவித்துள்ளார்

எனினும் நாமல் குமாரவின் குற்றச்சாட்டுகளிற்கு அப்பால் உறுதியான ஆதாரங்கள் எதனையும் கண்டுபிடிக்கமுடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்தவேளை ஜனாதிபதி சிறிசேன கொலை சதி முயற்சியின் பின்னால் முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாயிருக்கலாம் என தெரிவித்திருந்தார் எனவும் ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க சினைப்பர் என கருதப்படும் நபர் குறித்தும் சிறிசேன தெரிவித்திருந்தார்

எனினும் பொன்சேகா குறித்து தற்போது எந்த விசாரணையும் இடம்பெறவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போன சினைப்பர் குறித்து தான் எதனையும் அறியவில்லை எனவும்அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a comment