கூட்டு எதிர்க்கட்சி பிளவடையும் அறிகுறி

492 0

wduwasuபுதிய கட்சி உருவாக்கும் திட்டம் ஒன்று இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று அறிவித்திருந்தார்.

யட்டிநுவர, பிலிமதலாவை, ஊருபொல விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தர்.

இரத்தினபுரியில் எதிர்வரும் 08ஆம் திகதி இடம்பெறவுள்ளது நிபுணர் கூட்டமே தவிர, புதிய கட்சி உருவாக்குவதற்கான நடவடிக்கை அல்ல என மஹிந்த குறிப்பிட்டிருந்தார்.

எனினும் புதிய கட்சி உருவாக்குவதற்கு கூட்டு எதிர்க்கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட திட்டம் தற்போது வரையில் பிளவின் முடிவிற்கு நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதை அரசாங்கத்தில் சவால் ஏற்படுத்துவதற்காக புதிய அரசியல் கட்சி அவசியம் என பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உட்பட குழுவினர் கூறும் போது குமார வெல்கம, பந்துல குணவர்தன, ரோஹித அபேகுணவர்தன உட்பட குழுவினர் அதற்கு மாற்றுக் கருத்தினை கொண்டுள்ளனர்.

அத்துடன் இம்முறை நாட்டில் பிரதேச சபைகள் இரண்டு தேர்தலுக்கு அறிவித்துள்ளதனால் அவ்வாறான சந்தர்ப்பத்தில் புதிய கட்சி ஒன்று பதிவிடுவதற்காக சட்டம் உண்டா என்பது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் வினவுவதாக தெரிவிக்கப்படுகின்ற