சமாதானம், நீதி மற்றும் உறுதியான நிறுவனங்களை ஏற்படுத்தும் UNDP!

251 0

இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) முன்னெடுக்கும் வலுவாதார அபிவிருத்தி இலக்குகள் (SDG) 16: சமாதானம், நீதி மற்றும் உறுதியான நிறுவனங்களை ஏற்படுத்தும் திட்டத்துக்கு உதவிகளை வழங்கும் உடன்படிக்கையில் நோர்வே அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. 

டிசம்பர் 2018 முதல் 2020 டிசம்பர் வரை இந்த உடன்படிக்கை அமுலில் இருக்கும். இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்காக நோர்வே தூதுவர் தோர்ப்ஜோர்ன் கவுஸ்டட்சேதர் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்காக பணிப்பாளர் யோர்ன் சொரென்சன் ஆகியோர் இந்த பங்காண்மை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர். இந்த உதவித் தொகையின் பெறுமதி 12.6 மில்லியன் குரோன் (1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஆக அமைந்துள்ளது.

இந்த பங்காண்மையின் பிரகாரம், மேம்படுத்தப்பட்ட பொறுப்புக்கூறல் மற்றும் உள்வாங்கல்களின் ஊடாக பிரதான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கொள்கை வகுத்தல் மற்றும் மேலோட்ட கட்டமைப்புகளை வலிமைப்படுத்தல், பின்தங்கிய மற்றும் இலகுவில் பாதிப்புறக்கூடிய நிலையிலுள்ள மக்களுக்கு நீதிக்கான அணுகலை பெற்றுக் கொள்ள உதவுவது, சட்ட ரீதியான பாதுகாப்பு மற்றும் பாலின உணர்திறன் வாய்ந்த சேவைகள் அடங்கலான நடவடிக்கைகளை வலிமைப்படுத்த ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் எதிர்பார்க்கிறது.

தேசிய மற்றும் பகுதியளவு அரச நிறுவனங்களுக்கு சமத்துவமான, பொறுப்புக்கூறலுடனான மற்றும் வினைத்திறன் வாய்ந்த சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு திறன்களை ஏற்படுத்திக் கொடுக்கவும் எதிர்பார்க்கிறது. இந்த திட்டத்தை அமுலாக்குவதனூடாக, 2022 ஆம் ஆண்டளவில் இலங்கையில் வசிக்கும் பின்தங்கிய மற்றும் இலகுவில் பாதிப்புறக்கூடிய நிலையிலுள்ள மக்களுக்கு உரிமை அடிப்படையிலான, பொறுப்புக்கூறக்கூடிய, அனைத்தும் உள்ளடக்கிய மற்றும் வினைத்திறன் வாய்ந்த பொது நிறுவனங்களின் அனுகூலங்களை பெறக்கூடியதாக இருக்கும் என்பதுடன் சமூகங்கள் மத்தியிலும் தேசத்தின் மீதும் நம்பிக்கையை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் எதிர்பார்க்கிறது.

இந்த திட்டம் தொடர்பாக நோர்வே தூதுவர் தோர்ப்ஜோர்ன் கவுஸ்டட்சேதர் கருத்துத் தெரிவிக்கையில், ´ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) முன்னெடுக்கும் வலுவாதார அபிவிருத்தி இலக்குகள் (SDG) 16: சமாதானம், நீதி மற்றும் உறுதியான நிறுவனங்களை ஏற்படுத்தும் திட்டத்துக்கு நோர்வே அரசு உதவிகளை வழங்குவதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் மற்றும் வலுவாதார அபிவிருத்தி இலக்குகளை ஊக்குவிப்பதற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட அமைப்பாக திகழ்கிறது.´ என்றார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், ´வலுவாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு உள்ளடக்கமான சமூகங்களையும் சமாதானத்தை ஊக்குவிப்பதற்கும், சகலருக்கும் நீதியை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் வினைத்திறன் வாய்ந்த பொது நிறுவனங்களின் செயற்பாடுகள் முக்கியமானவையாகும். தற்போது, இலங்கை கடினமான காலத்தை கடந்த வண்ணமுள்ள நிலையில், கடந்த காலத்தில் நிறுவனங்களை வலிமைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் விளைவாக நேர்த்தியான அபிவிருத்திகள் சிலதை எம்மால் காணக்கூடியதாகவுள்ளது. எனவே, அபிவிருத்தி பங்காளர்கள் எனும் வகையில், சமாதானம், நீதி மற்றும் உறுதியான நிறுவனங்களை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு நாம் தொடர்ந்து உதவிகளை வழங்குவது முக்கியமானதாகும்.´ என்றார்.

இந்த திட்டம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் யோர்ன் சொரென்சன் கருத்துத் தெரிவிக்கையில், ´வலுவாதார அபிவிருத்தி இலக்குகள் மற்றும் 2030 நிகழ்ச்சி நிரல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அழைப்பாக அமைந்துள்ளதுடன், நாம் அனைவரும் ஒன்றிணைந்து வலுவாதார அபிவிருத்தி எனும் பொதுவான இலக்கை நோக்கி செயலாற்றுவதற்கு உதவியாக அமைந்துள்ளன. இதன் ஒரு அங்கமாக, எமது ஒன்றிணைவை நோர்வே அரசாங்கத்துடன் மேற்கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.

இலங்கையில் வலுவாதாரத்தை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீண்ட காலமாக பங்களிப்பை வழங்கும் பங்காளராக நோர்வே அரசு திகழ்கிறது.´ என்றார்.

Leave a comment