நோர்வுட் , மஸ்கெலியா மற்றும் சாமிமலை நகரங்களில் பொது சுகாதார அதிகாரிகள் 40 பேர் கொண்ட குழு சுற்றி வலைப்பை மேற்கொண்டனர்.அப்போது வர்த்தக நிலையங்கள், உணவு விடுதிகள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் அடங்கலாக 85 கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தாகவும் அதில் 31 வர்த்தக நிலையங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இவ்வழக்கில் 5 பேக்கரிகள்,23 சில்லறை விற்பனை நிலையங்கள், 2 வைத்தியசாலை சிற்றுண்டி சாலைக்கள் மற்றும் ஒரு இறைச்சி விற்பனை நிலையமும் அடங்குவதாகவும் இவ்வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதியன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

