சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

287 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இரவு 7.00 மணியளவில் கூடவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரிய பிளவுகள் ஏற்பட்டு 54 உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றுள்ள நிலையில் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தின் போது சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

Leave a comment