”பொட்டுஅம்மான் தற்கொலை குண்டை வெடிக்கவைத்து இறந்துவிட்டார்”- என்கிறார் சரத் பொன்சேகா

5 0

மே 19 ஆம் திகதி காலை நத்திக்கடலில் கிழக்க பகுதியில் பிரபாகரனின் மகன் சார்ள்ஸின் படையணியுடனேயே மோதல் இடம்பெற்றது அதன்போது வடக்கு கடற்கரைக்குசென்று ஐந்துபேருடன் பாய்ந்துசெல்வதற்கு பிரபாரகன் முயற்சித்தார். அங்கு பொட்டுஅம்மானும் இருந்துள்ளார். அவ்வேளையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் – பொட்டுஅம்மான் தற்கொலை குண்டை வெடிக்கவைத்து இறந்துவிட்டார் என போரின் இறுதிகட்டத்தில் இராணுவத்தளபதியாக செயற்பட்ட பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேக்கா தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று (06) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக கருணா தகவல் வெளியிட்டார் என பத்திரிகையொன்றில் செய்தி வெளியாகியுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி நந்திக்கடல் பகுதியில் வைத்து போர்முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பிரபாகரன் , சூசை உள்ளிட்ட தலைவர்களின் சடலங்கள் அங்கிருந்தே மீட்கப்பட்டன.

19 ஆம் திகதிகாலை பொட்டம்மானின் சடலம் மீட்கப்படவில்லை. அவரின் மனைவியின் சடலமே மீட்கப்பட்டது. போர்காலத்தில் இராணுவப் பாதுகாப்புடன் கருணாவை கொழும்பில் இரகசிய இடமொன்றில் வைத்து பாதுகாத்தோம். போர்முடிவடைந்த பின்னர் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை அடையாளம் காட்டுவதற்காகவே அவரை நந்திக்கடல் பகுதிக்கு அழைத்துச்சென்றோம்.

மே 19 ஆம் திகதி காலை நத்திக்கடலில் கிழக்க பகுதியில் பிரபாகரனின் மகன் சார்ள்ஸின் படையணியுடனேயே மோதல் இடம்பெற்றது. வடக்கு கடற்கரைக்குசென்று ஐந்துபேருடன் பாய்ந்துசெல்வதற்கு பிரபாரகன் முயற்சித்தார். அங்கு பொட்டுஅம்மானும் இருந்துள்ளார். அவ்வேளையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் – பொட்டுஅம்மான் தற்கொலை குண்டை வெடிக்கவைத்து இறந்துள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரனுடனேயே பொட்டு அம்மான் இருந்தார். அவர் நோர்வேயிக்கு பாய்ந்தோடவில்லை. அவர் உயிரிழந்துவிட்டார் என நம்புகின்றோம்.

புலிகள் அமைப்பிலிருந்து கருணா வெளியேறியிருந்தாலும் , போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு படையினருக்கு அவர் பெரிதாக எவ்வித உதவியையும் செய்யவில்லை. போர்முடிவடைந்தப்பின்னர் உல்லாச வாழ்க்கையே கருணா அனுபவித்தார். கொழும்பில் கும்மாலமடித்தார்” என்றார் பொன்சேகா.

Related Post

மங்களராமய விகாராதிபதிக்குப் பின்னணியில் மகிந்தராஜபக்ஷ?

Posted by - November 19, 2016 0
“வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள மக்கள் சிறுபான்மையாக வாழ்கிறார்கள். அவர்களை பற்றியும் நீங்கள் தமிழ் மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இப்போது சிங்கள…

திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

Posted by - October 28, 2017 0
வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மக்கள் அமைப்பினால் இந்த…

கிரிக்கெட்டுக்காக எந்த சந்தர்ப்பத்திலும் ஒத்துழைக்கத் தயார்

Posted by - July 2, 2017 0
இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்ப தனக்கு அழைப்பு விடுத்தால், எந்த நேரத்திலும் ஒத்துழைக்கத் தயாராகவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல்

Posted by - August 30, 2016 0
ரிவிர செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்வம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரியை எதிர்வரும் 9ஆம்…

மகிந்தானந்த அலுத்கமகேவின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

Posted by - October 30, 2017 0
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரது கடவுச்சீட்டை இன்று நீதிமன்றத்தில்…

Leave a comment

Your email address will not be published.