2 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

21 0

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று (06) அதிகாலை 12 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து பதுளை நோக்கி பஸ்ஸில் கேரள கஞ்சாவினை கடத்தி செல்வதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நொச்சிமோட்டை பாலத்தடியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இரண்டு கிலோ கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பதுளை மாவட்டத்தினை சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரை பொலிஸார் கைது செய்ததுடன் கைப்பற்றிய கேரள கஞ்சாவினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

Related Post

யாழில் துப்பாக்கிச் சூட்டு விசாரணையை மேற்கொள்ள விசேட குற்றத் தடுப்பு விசாரணை குழு!

Posted by - October 25, 2017 0
யாழ்ப்பாண மணியம் தோட்டம் உதயபுரம் பகுதியில் இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக கொழும்பில் இருந்து விசேட குற்றத் தடுப்பு விசாரணை…

மூன்றாவது முறையாகவும் தீக்கிரையாக்கப்பட்ட வனப்பகுதி

Posted by - May 6, 2018 0
கேப்பாபுலவில் உள்ள தேக்கங்காட்டு வனப்பகுதியில் நேற்று (05) மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது தடவையாகவும் நேற்று இவ்வாறு தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காட்டுக்கு அருகில் மூட்டிய நெருப்பு காரணமாக…

நீங்கள் எனது மனைவி இல்லை – கதை சொல்லி சபையை கேலிக்கூத்தாக்கிய சயந்தன்!

Posted by - July 26, 2018 0
வடக்கு மாகாணசபையில் சம்பந்தமில்லாது நந்தவனத்தில் ஓர் ஆண்டி என……. பாடல்கள் பாடுவதும்கதைககள் சொல்வதும் சில உறுப்பினர்களுக்கு ஒரு பொழுதுபோக்கான விடயம்.

69 இந்திய மீனவர்கள் விடுதலை

Posted by - December 29, 2017 0
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 69 பேரை விடுவிக்குமாறு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் இன்று உத்தரவிட்டுள்ளன. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற…

விரோதமாக மணல் அகழ்வு – 12 பேர் கைது

Posted by - May 21, 2017 0
கிளிநொச்சி கல்லாறு காட்டுப் பகுதியில் சட்ட விரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று கல்லாறு பிரதேசத்தில் வைத்து தருமபுரம் காவல்துறையினர் கைது…

Leave a comment

Your email address will not be published.