உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 8-வது முறையாக ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்

21 0

‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் தொடர்ந்து எட்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.

உலகின் பெரும் செல்வந்தர்கள் மற்றும் சக்தியும் செல்வாக்கும் நிறைந்த ஆண், பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும்  ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டு வருகிறது.

வர்த்தகம், தொழில்நுட்பம், நிதித்துறை, ஊடகம் மற்றும் கேளிக்கைத்துறை, அரசியல் மற்றும் கொள்கை, கொடையாளர்கள் என மொத்தம் 6 பிரிவுகளில் 100 பேர் இந்த பட்டியலில் இடம்பெறுவார்கள்.
பிரிட்டன் பிரதமர் தெரசா மே

அவ்வகையில், இந்த ஆண்டு நிலவரப்படி உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் தொடர்ந்து எட்டாவது முறையாக ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம் பிடித்துள்ளார். அவரையடுத்து, பிரிட்டன் பிரதமர் தெரசா மே இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்த இடத்தை தெரசா மே தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தக்கவைத்து கொண்டுள்ளார்.

இவர்களை தொடர்ந்து சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்ட்டைன் லகார்டே மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Related Post

இந்தோனேசியாவில் காட்டுத் தீ – கட்டுப்படுத்த மலேசியா உதவி

Posted by - August 27, 2016 0
இந்தோனேசியாவில் வனாந்தர பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீயை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க அண்டை நாடான மலேசியா முன்வந்துள்ளது. மலேசிய பிரதமர் காரியலயம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…

மந்திரிகளை மலர்தூவி வரவேற்க கூடாது: கட்சி தொண்டர்களுக்கு உ.பி. முதல்வர் யோகி உத்தரவு

Posted by - May 2, 2017 0
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வரும்நிலையில், தற்போது மந்திரிகளை மலர் தூவி வரவேற்க கூடாது என கட்சி தொண்டர்களுக்கு…

23 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் நீடிக்கப்படாது – அமைச்சர் பைசர் முஸ்தபா

Posted by - July 1, 2016 0
காலாவதியாகியுள்ள 23 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி காலம் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.…

துருக்கியில் அவசரநிலை சட்டம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

Posted by - January 4, 2017 0
துருக்கி நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க நடந்த கலகத்தை அடுத்து, கடந்த ஜூலை மாதம் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு…

Leave a comment

Your email address will not be published.