விடுதி உரிமையாளரிடமிருந்து ஆபாச சி.டி.க்கள் பறிமுதல்

2 0

ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான உரிமையாளரிடமிருந்து ஆபாச சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் கண்ணுக்கு தெரியாத வகையில் சிறிய ரக ரகசிய கேமராக்களை பொருத்திய விடுதி உரிமையாளர் சஞ்சீவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சியை சேர்ந்த சஞ்சீவுக்கு திருமணமாகி பள்ளியில் படிக்கும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாகவே அவர் செக்ஸ் மன்னனாக வலம் வந்துள்ளார். விடுதியை நடத்துவதற்கு முன்னர் கட்டுமான நிறுவனம் ஒன்றை சஞ்சீவ் நடத்தி வந்துள்ளார். அப்போது அங்கு பணியாற்றிய பெண்கள் பலரை தனது வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்துள்ளார். அப்படி செக்ஸ் சுகம் அனுபவித்த போது அப்பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்று வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோக்களை சி.டி.யாகவும் சஞ்சீவ் பதிவு செய்து வைத்திருந்தார். இதனை காட்டியே மீண்டும் மீண்டும் பல பெண்களை ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

விடுதியில் பொருத்திய கேமரா தொடர்பாக ஏதாவது வீடியோ காட்சிகள் கிடைக்குமா? என்பது பற்றி சஞ்சீவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கட்டுமான அதிபராக இருந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் சிக்கின. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த சி.டி.யில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அந்த சி.டி.யில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பலர் இருந்தனர். சஞ்சீவ் தனது நண்பர்களுடன் சேர்ந்து வாட்ஸ்-அப் குழு ஒன்றையும் தொடங்கி இருக்கிறார்.

இந்த குழு மூலம் ஆபாச படங்களை சஞ்சீவ் வாட்ஸ்- அப்பில் பரப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கிடையே கோர்ட்டில் ஆஜர் படுத்த அழைத்துச் செல்லப்பட்ட போது சஞ்சீவ் நடக்க முடியாமல் அவதிப்பட்டார். அவரது காலில் முறிவு ஏற்பட்டது போன்று காணப்பட்டது.

இதுபற்றி போலீசார் கூறும்போது, தப்பி ஓட முயன்றபோது தவறி விழுந்துவிட்டதால் காலில் முறிவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

சஞ்சீவியின் லீலைகள் வெளியில் வருவதற்கு புதுவையை சேர்ந்த பேராசிரியை ஒருவரே முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவர்தான் தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி மூலமாக இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து பரங்கிமலை துணை கமி‌ஷனர் முத்துசாமி, உதவி கமி‌ஷனர் கெங்கைராஜ் ஆகியோரது மேற்பார்வையில் ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி சஞ்சீவை கைது செய்தனர்.

Related Post

கஜா புயல் மீட்புப்பணிகளில் பணியாற்றும் அனைத்து பணியாளருக்கும் பாராட்டு – எடப்பாடி பழனிசாமி அறிக்கை

Posted by - November 27, 2018 0
கஜா புயல் மீட்புப்பணிகளில் இரவு-பகலாக தன்னலம் கருதாமல் சிறப்பாக பணியாற்றும் அனைத்து துறை பணியாளர்களுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாக்கு நீரிணை கடலை 12 மணி நேரத்தில் நீந்திக் கடந்து சென்னை மாணவன் சாதனை!

Posted by - March 26, 2018 0
சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜ ஈஸ்வர பிரபு தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை கடலை 12 மணி நேரத்தில் நீந்தி சனிக்கிழமை கடந்து…

42 நாடுகள் பங்கேற்கும் ராணுவ தளவாட கண்காட்சி: சென்னை அருகே !

Posted by - March 3, 2018 0
சென்னை அருகே முதன்முறையாக ராணுவ தளவாட கண்காட்சி திரிவிடந்தையில் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்குகிறது. இதில் 50-க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கஜா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Posted by - November 16, 2018 0
கஜா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவில் கட்டுமான பணிகளுக்கு புதிய ஒற்றைச்சாளர முறை

Posted by - November 6, 2016 0
பெரிய அளவில் கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி பெறுவதற்கான புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.