போராளிகள் தொடர்புபட்டுள்ளதை எந்த காரணத்திற்காகவும் அரசியல் விவகாரமாக மாற்ற கூடாது !

241 0

வவுணதீவில்  பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் தொடர்புபட்டுள்ளதை எந்த காரணத்திற்காகவும் அரசியல் விவகாரமாக மாற்ற கூடாது என முன்னாள் இராணுவதளபதி தயா ரட்ணாயக்க தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தகாலத்தின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் மீண்டும் ஆயுதத்தை பயன்படுத்தவேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆராயவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வவுணதீவு சம்பவம் தனித்தவொரு சம்பவமாகயிருக்கலாம் என தெரிவித்துள்ள முன்னாள் இராணுவதளபதி புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் குறித்த மறுஆய்வுகளை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் மற்றும் அரசமைப்பு நெருக்கடியை விரைவில் முடிவிற்கு கொண்டுவராதபட்சத்தில் மோசமான விளைவுகள் ஏற்படலாம் எனவும் முன்னாள் இராணுவதளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்படாத முன்னாள் போராளிகள் உள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் அரசியல் ரீதியில் நிச்சயமற்ற நிலை தொடர்ந்தால் அதனை பயன்படுத்துவதற்கு முன்னாள் போராளிகள் மாத்திரமல்லாமல் வேறு தரப்பினரும் முயற்சிசெய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment