பிரான்சு ஆர்ஜென்தையில் நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு

2 0

பிரான்சில் பாரிசின் புறநகர்ப்பகுதிகளில் ஒன்றான ஆர்ஜென்தையில் 24.11.2014 அன்று சாவடைந்த நாட்டுப்பற்றாளர் மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு ஆர்ஜென்தை தமிழ்ச்சோலை மண்டபத்தில் கடந்த 02.12.2018 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு இடம்பெற்றது.

ஆர்ஜென்தை பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை 1990ஆம் ஆண்டு கொக்குவில் பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்த மேஜர் இன்பன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார். நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களின் துணைவியார் மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து அனைவரும் சுடரேற்றி மலர்வணக்கம் செய்தனர்.

தொடர்ந்து கலைநிகழ்வுகள், நினைவுரைகள் இடம்பெற்றன. சிறப்புரைகளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப்பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம், பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்ததைத் தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

Related Post

சர்வதேச இசைக்கொண்டாட்ட நாளில் பேர்லின் நகரில் ஈழத்து சிறுவர்களின் இசைக் கச்சேரி

Posted by - June 23, 2017 0
சர்வதேச இசைக்கொண்டாட்ட நாளையொட்டி (Fête de la Musique) நேற்றைய தினம் பேர்லின் நகரில் மக்கள் அதிகமாக நடமாடும் பொது வெளியரங்குகளில், பல்லின கலைஞர்கள் பொதுநலச் சேவையாக…

நல்லாட்சி நாயகர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ஒரு வருட காலக் கண்ணீர்ப் போராட்டமும் — அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - February 20, 2018 0
2009ம் ஆண்டு போர் முடிந்து ஒன்பது வருடங்களைக் கடக்கும் நிலையில், சிங்களத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கான நீதி இன்றுவரை கானல் நீராகவே உள்ளது.…

அடைக்கலம் கோரிய இலங்கை தமிழர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Posted by - August 10, 2016 0
செக் குடியரசில் அரசியல் அடைக்கலம் கோரும் நோக்கில் ப்ராக் வானுர்தி தளத்தை சென்றடைந்த இலங்கை தமிழர் ஒருவர் அந்த நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த இலங்கையர் தாம்…

நியாயம் தேடும் தமிழீழப் பெண்கள் வாழ்வு . உலகப் பெண்கள் நாளில் ஓர் பார்வை

Posted by - March 7, 2017 0
வேலைக்கான நேரக் குறைப்பு ,ஆண்களுக்கு சமமான ஊதியக் கொடுப்பனவு ,வாக்குரிமை போன்ற பிரதான காரணிகளை முன்னிறுத்தி புரட்சிகர எழுர்ச்சியின் உந்துதலால் உலகில் நிறுவப்பட்டதும் ,அனைத்து நாடுகளின் அங்கீகாரம்…

யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2016

Posted by - November 30, 2016 0
விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி, விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை…

Leave a comment

Your email address will not be published.