இத்தாலி மேற்பிராந்திய தேசிய மாவீரர் நாள் 2018

33 0

இத்தாலி மேற்பிராந்தியத்தில் ரெச்சியோ எமிலியா நாப்போலி நகரங்களில் 02.12.18 அன்று தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் இடம்பெற்றது. முதலில் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டதை தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது .பின் 2008ம் ஆண்டிற்க்கான தமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் தின உரையின் காணொளி ஒளிபரப்பப்பட்டது. அடுத்து அகவணக்கத்தை தொடர்ந்து துயிலும் இல்லப்பாடல் ஒலிக்க பிரதான ஈகை சுடர் ஏற்றப்பட சமநேரத்தில் மாவீரர் குடும்பத்தினர் ஈகைச்சுடர்களை ஏற்றி வைத்தனர். பின் பொதுமக்களின் மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது .

அடுத்து எழிச்சி கானங்கள் இநடனங்கள் இடம்பெற்றன தொடர்ந்து திலீபன் தமிழ் சோலை மாணவர்கள் பங்கேற்ற மாவீரர் ஞாபகார்த்த பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது .
தமிழீழ விடுதலைப்புலிகளின் 2018 ஆண்டிற்கான தமிழீழ தேசிய மாவீரர் தின உரையின் ஒலி வடிவம் ஒலிபரப்பட்டதை தொடர்ந்து கூடியிருந்த அனைவரும் ஒன்றிணைந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர் தொடர்ந்து தேசியக் கொடி இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிறைவுற்றது.

இவ்வாண்டும் பல இடர்பாடுகள் மத்தியிலும் ரெச்சியோ எமிலியா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ரெச்சியோ எமிலியா மற்றும் பொலோனியா மாந்தோவாஇ வெரோனா இ மிலானோ இயெனோவா இதொரினோ இபியல்லா போன்ற தூரப்பிரதேசங்களில் இருந்து பெரும்அளவில் மக்கள் உணர்வுடன் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.