இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மஹிந்த தரப்பினர் மேன்முறையீடு

280 0

மேன் முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மஹிந்த தரப்பினர் மேன்முறையீட்டு மனுவொன்றை இன்று தாக்கல் செய்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தாக்கல் செய்த நீதிப் பேராணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் நேற்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்க இடைக்கால தடையுத்தரவை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து மஹிந்த ராஜபக்ஷ உட்பட 49 அமைச்சரவை உறுப்பினர்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந் நிலையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தடையுத்தரவுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ தரப்பு சார்பில் உதய கம்மன்பில உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment