ஹிலரி – ட்ரம்ப் விவாதம்

318 0

hillary_vc1அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களான ஹிலரி கிளின்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் இடையிலான நேரடி விவாதம் நிறைவடைந்துள்ளது.

90 நிமிடங்கள் இந்த விவாதம் இடம்பெற்றது.

இதன்போது வேலை வாய்ப்பு, தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன் இரண்டு தரப்பினரும் பரஷ்பர குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துக் கொண்டனர்.

ஹிலரி கிளின்டன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கான தகுதி அவரிடம் இல்லை என்று டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தினார்.

மாறாக டொனால்ட் ட்ரம்ப் இனபேதங்களை முன்வைத்து அரசியல் நடத்த முற்படுவதாக ஹிலரி குற்றம் சுமத்தினார்.

இறுதியாக இந்த விவாதத்தில் ஹலரி கிளின்டன் வெற்றி பெற்றதாக பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்தன.