நாட்டிலுள்ள பிரச்சினையை மீண்டும் இழுத்தடிப்புச் செய்யாமல் முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
சதிகார நடவடிக்கையை தெளிவுபடுத்திய பின்னரேயே தேர்தலுக்குச் செல்ல வேண்டும். சதிகார அரசாங்கமொன்றுடன் தேர்தலுக்குச் செல்வது ஆபத்தானது.
பாராளுமன்றத்தில் நடாத்தப்பட்ட தேர்தலின் பெறுபேறுகளை ஏற்றுக் கொள்ளாத இந்த ஜனாதிபதி நாட்டு மக்களின் தேர்தல் பெறுபேற்றை ஏற்றுக் கொள்வாரா? இவர்களுக்கு நாட்டில் நியாயமான தேர்தல் ஒன்றை நடாத்த முடியாது எனவும் அவர் மேலும் கூறினார்.
அக்கட்சி கொழும்பில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

