கூட்டமைப்பின் பித்தலாட்டமா? பிதட்டல்களா?

102 0

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பித்தம் தலைக்கெறிவிட்டது. கூட்டமைப்பின் தலைமைக் கட்சி என கூறப்படும் தமிழரசுக்கட்சி நாட்டாமை செலுத்தி  தமி்ழ் மக்களை நட்டாற்றில் தத்தளிக்க விட்டு விட்டது.

காலத்துக்கு காலம் நிபந்தனைகள் அற்ற ஆதரவுகளை  சிங்கள  அரசுகளுக்கு வழங்கி தமிழ் இனத்தை ஆதரவற்றோராக மாற்றி கூட்டமைப்பு தலைமைகள் குளிரூட்டப்பட்ட அறைகளில் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

பல தேர்தல்களுக்காக மேடைகளில் தமிழ் தேசியம் பேசி மக்களின் வாக்குகளை பெற்ற  பின் சிங்கள ஏகாதிபத்தியத்தின் எலும்பு துண்டுகளை கௌவிக் கொண்டு குரைக்கின்றனர்.

சிங்கள தேசத்தவர்களும் தமிழரைப் போலவே மாறிவிட்டார்களோ? போட்டி,பொறாமை, உட்கட்சி மோதல், நயவஞசகம், காட்டிக்கொடுப்பு,கட்சித்தாவல்கள், பதவி ஆசை என பல தீய பழக்கங்கள்  சிங்களவரையும் பற்றிக் கொண்டது.

ஆசிய கண்டத்தில் சிறிலங்கா நாடாளுமன்றம் சிறப்பாக இயங்கி வந்தது. ஆனால் தற்போது கேலிக்கூத்துக்குரிய இடமாக மாறிவிட்டது. சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு மனநோயாளியைப் போல் நடந்து கொள்ளகிறார்.

இவ்வருடம் (2018) அக்டோபர் 26ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றம் நாடக மேடையாக மாறியுள்ளது. திரைக்கதை எழுதப்படவும் இல்லை . ஒத்திகை பார்கப்படவும் இல்லை ஆனால் நகைச்சுவையும் சண்டைக் காட்சிகளும் நிறைந்த விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

நாடகத்தில் பங்கேற்காது பார்வையாளராக மட்டும் இருந்து தமிழ் மக்களின் கனதியை காட்ட விரும்பாத கூட்டமைப்பு பதின்னான்கு சிறந்த நடிகர்களை துணை நடிகர்களாக்கி பச்சை உடை அலங்காரம் செய்து  மேடை ஏற்றியுள்ளது.

நாடக அரங்கம் தயாராக முன்பே மண்டையன் குழுவின் நடிகர் தனிநடிப்புக்கு மேடையேறிவிட்டார். கிழக்கு வெளுக்கும் என தமிழ்மக்களின் ஒருபகுதியினர் பாத்திருக்க பத்தில் வியாழன் வந்து பதியை விட்டு கிளம்பி விட்டார் மற்றொரு சோத்துப் பாசல் நடிகன்.

பதினாறு பேரை வைத்து பதினாறு செல்வங்களையயும் பெற்று வாழும் தமிழரசுகட்சி இரண்டு நடிகர்களை இழந்த போதிலும் பதிd;னான்கு நடிகர்களை அரங்கத்தில் வைத்து நாடகத்தை நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறது……

கூட்டமைப்பு  இப்போது கூத்தமைப்பாக …..

Leave a comment

Your email address will not be published.