போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

288 0

போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் கந்துருவெல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்துருவெல நகரத்தில் லொத்தர் விற்பனை நிலையம் ஒன்றுக்கு போலி நாணயத்தாளை வழங்கி லொத்தர் ஒன்றை பெற்றுக்கொள்ள சந்தேகநபர் முயற்சித்துள்ளார்.

இதன்போது அது போலி நாணயத்தாள் என்று அறிந்து கொண்ட விற்பனை நிலைய உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து போலி 500 ரூபா நாணயத்தாள்கள் மூன்றையும், அச்சு இயந்திரம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலன்னருவை, நவநகர பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Leave a comment