ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைுஞர் கைது

272 0

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றத்மலானை பிரதேசத்தில் 02 கிராமும் 200 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ தீர்க்கப்படாத குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

றத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைுஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment