நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஏப்ரல் மாதத்துக்கு பிற்போடப்பட்டது

336 0

சட்டவிரோத நிதி மூலம் கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிற்போடப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சி முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதிவாதிகள் தரப்பின் சிரேஷ்ட சட்டத்தரணிகள் இன்றைய தினம் வேறொரு வழக்கில் ஆஜராகி உள்ளதால், இந்த வழக்கை வேறொரு தினத்தில் விசாரிக்குமாறு பிரதிவாதிகள் தரப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம் அன்றைய தினம் சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டது.

சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment