இன்றைய பாராளுமன்ற அமர்வு சட்ட விரோதமானது-தினேஷ் குணவர்தன

264 0

இன்று கூடிய பாராளுமன்றம் அரசியலமைப்புக்கு எதிரான சட்ட விரோதமானது என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார். இன்று (29) காலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவால் தெரிவு செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் சிலரை மாத்திரம் அழைத்து நடத்தப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டம் சட்ட விரோதமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த அரசியலமைப்புக்கு எதிரான செயற்பாட்டுக்கு ஆளும் கட்சி என்ற வகையில் கலந்து கொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Leave a comment