நெருக்கடிக்கு மைத்திரியே பொறுப்பு- குமார

500 0

மைத்திரிபால சிறிசேனவே இன்றைய அரசியல் நெருக்கடிகளுக்கு  முழு பொறுப்பினையும் ஏற்க வேண்டும்.  இதற்கு மஹிந்த  ராஜபக்ஷவும்  பங்குதாரராக காணப்படுகின்றார் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான காலம் இன்னும் கடக்கவில்லை. பாராளுமன்றத்தின்  பெரும்பான்மைக்கு மதிப்பளித்து ஜனாதிபதி விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

பாராளுமன்ற புறக்கணிப்பு தொடர்பில் தெளிவுப்படுத்துகையிலேயே மேற்கண்டவாறு குமார வெல்கம தெரிவித்தார்.

அவர்  மேலும்  குறிப்பிடுகையில்,

இடைக்கால அரசாங்கத்தின் பொறுப்புக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்று அரசியல் ரீதியில் தவறிழைத்து விட்டார். அவர் சற்று பொறுமை காத்திருந்தால் தற்போது நாட்டின் முழு ஆட்சியதிகாரத்தையும் நாட்டு மக்களே ஜனநாயக ரீதியில் அவருக்கு பெற்றுக் கொடுத்திருப்பார்கள் அதற்கான சூழ்நிலைமைகளே காணப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இன்றைய அரசியல் நெருக்கடிகளுக்கு முழு பொறுப்பினையும் ஏற்க வேண்டும். இதற்கும் மஹிந்த ராஜபக்ஷவும் பங்குதாரராக காணப்படுகின்றார்.

ஐக்கிய தேசிய கட்சியினர் தங்களின் பெரும்பான்மை பலத்தினை பலமுறை பாராளுமன்றத்தில் நிரூபித்து விட்டனர். ஆனால் ஜனாதிபதி சில விடயங்களை முறையாக நிறைவேற்றுங்கள் என்று குறிப்பிட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை நிராகரித்து விட்டார்.

பெரும்பான்மை பலம் உள்ளவர்களிடம் ஆட்சியினை ஒப்படைத்து விட்டு எதிர்க்கட்சியாக செயற்பட்டால் மத்திரமே தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு ஒரு தீர்வு கிடைக்கப் பெறும் என்றார்.

Leave a comment