ஜனாதிபதியை கரு மதிக்காததே பாராளுமன்ற வன்முறைகளுக்கு காரணம் – சுசில்

5152 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களை மதித்து சபாநாயகர் செயற்பட்டிருந்தால் பாராளுமன்றத்திற்குள் பாரிய மோதல்கள் இடம்பெற்றிருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

மேலும் நாட்டில் முத்துறைகளும் சுயாதீனமாக செயற்பட வேண்டும் ஒரு துறை பிறிதொரு துறையின் விவகாரங்களில் தலையிடக் கூடாது. ஆனால் தற்போது சட்டத்துறைக்கும் நிறைவேற்று துறைக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள்  காணப்படுகின்றது. இம் முரண்பாடுகளை சபாநாயகரே தீவிரப்படுத்தினார்.

உயர்நீதிமன்றம் தற்காலிக் தடையத்தரவை பிறப்பித்துள்ள தருணத்தில் பாராளுமன்றத்தில் உயர்நீதிமன்றில் வழக்கில் உள்ள விடயம் தொடர்பில் எவ்வித செயற்பாடுகளும் முன்னெடுக்கபட கூடாது ஆனால் இன்று சபாநாயகர் நீதித்துறையினையும் அவமதிக்கும் விதமாக செயற்படுகின்றார்.

இந்நிலைமை தொடருமாயின் முத்துறைகளுக்குமிடையில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெற்று நாடு மேலும் நெருக்கடிகளுக்குள்ளாகும் எனவும் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Leave a comment