ஜனநாயகத்தை பாதுகாப்பது எனது கடமை – சபாநாயகர்

305 0

ஜனநாயகத்திற்கு எதிரான அனைத்து விதமான  அச்சுறுத்தல்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு இன்னமும் பிறக்காத தலைமுறைக்காக ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியது எனது கடமை என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சரியான தூரநோக்கு ஒழுக்கம் அர்ப்பணிப்பு சட்டத்தின் ஆட்சி ஆகியனவே அவசியமாக உள்ளன என குறிப்பிட்டுள்ள சபாநாயகர் சரியான நபர்கள் சரியான இடத்தில் இருக்கவேண்டியதும் அவசியமாகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பாராளுமன்றத்தில் நான் உடல்ரீதியில் தாக்கப்பட்டேன்,உயிர் ஆபத்தை எதிர்கொண்டேன்,நிந்தனை அவமரியாதை போன்றவற்றையும் நான் சந்தித்தேன் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

எதுசரியானதோ அதற்காக உறுதியுடன் நின்றமைக்காக நான் இவற்றை எதிர்கொண்டேன் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு எதிரான அனைத்து விதமான  அச்சுறுத்தல்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு இன்னமும் பிறக்காத தலைமுறைக்காக ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியது எனது கடமை என குறிப்பிட்டுள்ள கரு ஜெயசூரிய நாகரீக தேசமொன்றில் தனிப்பட்ட சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment