முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் சுராஜ் காரியவசத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பளித்தது.
தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக இருந்த போது சட்டத்துக்கு முரணாக பங்குகளைக் கொள்வனவு செய்ததாக அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த இலஞ்ச ஊழல் வழக்கிலேயே இத் தண்டனை அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் பிரதீப் சுராஜ் காரியவசத்துக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் 9 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

