யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

501 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் நினைவேந்தல் நினைவுகளுக்காக பல்கலைக்கழகத்திலுள்ள மாவீரர் நினைவுத் தூபி புனரமைக்கப்பட்டு மாவீரர் நாள் நிகழ்வுகளும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாவீரர் நாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்ற அதேவேளையில் பல்வேறு நிழக்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இதேபோன்ற மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் தயாராகிக் கொண்டிருக்கின்றது. பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவுத் தூபி மீளப் புனரமைக்கப்பட்டு புதுப் பொழிவுடன் காட்சியளிக்கின்றது.

Leave a comment