கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

413 0

திருகோணமலை தலமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லிங்கநகர் பிரதேசத்தில் இன்று கோதை மாத்திரையுடன் கேரளா கஞ்சாவை பாவிக்கும் நோக்கில் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் சந்தேகநபர்களகைது செய்துள்ளனர்.

யாவா வீதி, பெயாத்துமுனை, கிண்ணியாவைச் சேர்ந்த 26 வயதுடையவரிடமிருந்து 30 போதை மாத்திரைகளும், 1கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் காந்திநகர் திருகோணமலையை சேர்ந்த 20 வயதுடையவரிடமிருந்து 10 போதை மாத்திரைகளும் 1 கிராம் கஞ்சாவும் அவர்கள் பயணித்த இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றிய போதைப் பொருட்களையும், கைதுசெய்யப்பட்ட இருவரையும் திருகோணமலை தலமையகப் பொலிஸார் வசம் ஒப்படைத்ததாக பிராந்திய விஷத்தன்மையுயுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

Leave a comment