யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

397 0

மொனராகல, மாகந்தனமுல்ல சுமேத வாவிக்கு அருகில் கொலை செய்யப்பட்ட யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கழுத்து நெரிக்கப்பட்டு குறித்த யுவதி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு குறித்த கொலை இடம்பெற்றிருக்க கூடும் என்பதுடன் வெகரகொட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த யுவதியின் காதலன் சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment