அரசியல் கைதிகளின் போராட்டம் 6ஆவது நாளாகவும் தொடர்கிறது

317 0

jail
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
அநுராதபுரம் சிறைச்சாலையில், தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 21ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 
தமிழ் அரசியல் கைதிகள் தமது வழக்குகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதை முன்வைத்தே உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசாங்கத் தரப்பிலிருந்து குறித்த கால எல்லைக்குள் வழக்கை நிறைவு செய்வது தொடர்பிலோ அல்லது புனர்வாழ்வு வழங்குவது தொடர்பிலோ உறுதியான வாக்குறுதிகள் கிடைக்கும் பட்சத்தில், தமது உண்ணாவிரதத்தை மீள்பரிசீலனை செய்யத் தயாராக உள்ளதாகவும் உண்ணாவிரதத்ததில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

 
இந்நிலையில் இன்று காலை அநுராதபுர சிறைச்சாலை அதிகாரி உண்ணாவிரத்தத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டதற்கு அரசியல் கைதிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை.
அனுராதபுர சிறைச்சாலையில் கடந்த 21ஆம் திகதி முதல் 20 பேர் உண்ணாவிரதம் ஆரம்பித்த நிலையில் மூன்று பேர் வழக்கு விசாரணை காரணமாக போகம்பரை மற்றும் கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட காரணத்தால், தற்போது அனுராதபுரத்தில் 17 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் வயது முதிர்ந்தவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.