பாகிஸ்தான்: கராச்சியில் சீன தூதரகம் அருகே குண்டு வெடிப்பு 2 போலீசார் உயிரிழப்பு

399 0

பாகிஸ்தானில் சீன தூதரகம் அருகே குண்டு வெடித்தது. இதில் 2 போலீசார் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் உள்ள சீன தூதரகம் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. அந்த பகுதியில் துப்பாக்கிச்சூடும் நடைப்பெற்றது. இந்த சம்பவத்தில் 2 போலீசார் உயிரிழந்தனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என கருதப்படுவதால், சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூதரகத்தை சுற்றியுள்ள அனைத்து பாதைகளும் மூடப்பட்டன.  சம்பவ இடத்திற்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.  இந்த பகுதியில் மக்கள் நுழைவதை போலீசார் தடை செய்துள்ளனர். பாகிஸ்தானில் சீன் தூதரகம் அருகே குண்டுவெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a comment