குளவி கொட்டுக்கிலக்காகி பெண் தொழிலாளர்கள் பதின்மூன்று பேர் வைத்தியசாலையில்

590 0

அப்புத்தலைப் பகுதியின் தம்பேதன்னை பெருந்தோட்டப் பிரிவில் பதின்மூன்று பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கிலக்காகி அப்புத்தளை அரசினர் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தம்பேதன்னை பெருந்தோட்ட தொழிற்சாலை பிரிவு பெண் தொழிலாளர்களே குளவிக் கொட்டுக்கிலக்காகியுள்ளவர்களாவர்.

இப் பெண் தொழிலாளர்கள் தோட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டு அப்புத்தளை அரசினர் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஐவரது நிலை கவலைக்கிடமாகஇருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a comment