இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு எதிராக மகா சபையை உடன் கூட்டுமாறு தெரிவித்து 150 பேரின் கையொப்பத்துடன் அச்சங்கத்தின் செயலாளருக்கு மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சங்கத்தின் தலைவர் சங்கத்தின் யாப்புக்கு எதிராக செயற்படுவதாகவும், அவரின் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாகவும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற அரசியல் பதற்ற நிலைமையை நியாயப்படுத்தும் வகையில் சங்கத்தின் தலைவர் யு.ஆர்.டி. சில்வா வெளியிட்ட கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாகவும் அந்த மகஜரில் கூறப்பட்டுள்ளது.
இதனால், இவருக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றுவதற்கு சங்கத்தின் மகா சபையை கூட்டுமாறும் இக்குழுவினர் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதியின் பாராளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானம் மற்றும் ஜனாதிபதியின் பிரதமர் நியமனம் என்பன இலங்கை அரசியலமைப்புக்கு ஏற்பவே இடம்பெற்றுள்ளதாக இச்சங்கத்தின் தலைவர் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

