தற்போதைய அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தம்பர அமில தேரர் உட்பட சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் குழுவினர் ஆகியோர் இணைந்து சத்தியாக்கிரக போராட்டமொன்றை கொழும்பு விகாரமகா தேவி பூங்காவிற்கு முன்னால் ஆரம்பித்துள்ளனர்.
இந்த சத்தியாக்கிரகம் நடைபெறும் இடத்துக்கு பாட்டளி சம்பிக்க ரணவக்க எம்.பி. மற்றும் தயா கமகே ஆகியோரும் அரசியல் வாதிகளும் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

