புதிய பிரதமராக காமினி ஜயவிக்ரம பெரேரா ?

262 0

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகளுக்கு விரைவில் தீர்வு காணும் நோக்கில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் முக்கிய தீர்மானங்கள் சில மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஜனாதிபதி தயாரில்லை என்ற நிலைப்பாட்டைத் தொடர்ந்து, ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ராஜித சேனாரத்தன அல்லது சம்பிக்க ரணவக்கவை பிரதமராக நியமிக்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ன. என்றாலும் குறித்த யோசனைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பெரும்பாலான உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி உயர் பீட உறுப்பினர்களின் கூட்டத்தின் போது, ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகளுக்கு விரைவில் தீர்வு காணும் நோக்கில் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேராவை பிரதமராக நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி தேர்தலுக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உயர்பீட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment