சர்வ கட்சி கூட்டத்தை புறக்கணித்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தங்களுடைய செயலாளரினால் 2018.11.17 அன்று அனுப்பப்பட்ட கடிதத்தில் உங்களுடனான பேச்சுவார்த்தைக்கு வருமாறு எமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கீழ் வரும் விடயங்களை உங்களின் அவதானத்திற்கு கொண்டு வர வேண்டுமென நாங்கள் எண்ணுகின்றோம்.

பாராளுமன்றத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக கலந்துரையாடுவதே இந்த பேச்சுவார்த்தையின் நோக்கமாக உள்ளதாக அறிவித்துள்ளீர்கள்.

எனினும்  பாராளுமன்றத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் அனைத்துமே  உங்களின் சூழ்ச்சிகரமான அரசியல் நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகவும், இந்த காரணிகளை   அடிப்படையாக கொண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மையின் பிரதிபலிப்பாகவே நான் பார்க்கின்றோம்.

தற்போது நாட்டில் பாரதூரமான வகையில் அரசியல்  ஸ்திரமற்ற நிலைமை உருவாகியுள்ளது. 7 தாசாப்தங்களுக்கும் அதிகமான இலங்கை அரசியலில் இது போன்றதொரு நிலைமை முதற் தடவையாகவே உருவாகியுள்ளது எனவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.