இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா பயணம்!

333 0

பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியாவுக்கு செல்ல உள்ளார் என பாகிஸ்தான் வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வல்லரசு போட்டியில் முதலிடத்தை பிடிக்க முயன்றுவரும் சீனா இந்தியாவின் எதிரியான பாகிஸ்தான் மீது அளவுகடந்த பாசத்தை பொழிந்து வருகிறது.
பாகிஸ்தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்து வருகிறது.
தற்போது கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு சர்வதேச நிதியத்தின் உதவியை நாடியுள்ளது. அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக  சர்வதேச நிதியத்தின் அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் அடுத்த வாரம் மலேசியா செல்ல உள்ளார். அப்போது அவர் மலேசிய பிரதமர் மகாதிர் மொகமதுவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என அந்நாட்டு வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமராக பதவியேற்றபின் முதல் வெளிநாட்டு பயணமாக இம்ரான் கான் சீனாவுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

Leave a comment