கஜா புயல் வலுவிழக்க இன்னும் 6 மணிநேரமாகும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

301 0

கஜா புயலின் முழுப்பகுதி நிலப்பரப்பிற்கு வர இன்னும் 2 மணி நேரம் ஆகும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

கஜா புயலின் தாக்கம் அடுத்த 6 மணி நேரத்தில் குறையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிக பட்சமாக அதிராமபட்டினத்தில் 111 மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது. கஜா புயலின் முழுப்பகுதி நிலப்பரப்பிற்கு வர இன்னும் 2 மணி நேரம் ஆகும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

கஜா புயலின் கண்பகுதி கரையை கடந்தவுடன் எதிர் திசையில் இருந்து பலத்த காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலின் கண்பகுதி 26 கிமீ விட்டம் கொண்டது.  மேலும் புயல் நகரும் திசையில் காற்றின் வேக மாறுபாட்டால் கஜா கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டதாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

புயல் பாதிப்பு குறித்து காலையில்தான் முழுமையாக தெரியவரும் என வானிலை மைய இயக்குநர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.   நள்ளிரவு 12.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய புயல்  தற்போது கஜா புயல் கரையை கடந்து வருகிறது.

கஜா புயல் கரையை கடக்க தொடங்கியதால் நாகை, வேதாரண்யத்தில் 100 கிமீ வேகத்தில் காற்றி வீசி வருகிறது.  இதன் காரணமாக நாகை வேதாரண்யத்தில் புயல் காற்று வீசியதால் பல வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது.   நாகை வேதாரண்யத்தில் புயல் காற்று வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

கஜா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 26 கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் மீட்பு பணியினர் இரவோடு இரவாக பல இடங்களில் மரங்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனிடையே புயல் கரையை கடந்தவுடன் உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கும் என நாகை ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். தஞ்சை, கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

அரசின் அறிவிப்பு வரும் வரை மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்கியல் இருக்குமாறும், வெளியே வரவேண்டாம் எனவும் அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தி உள்ளார்.

புயலின் தாக்கத்தால் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.  நாகையில் உள்ளிட்ட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.

 

 

Leave a comment