இலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்!

268 0

இன்றைய நாள் இலங்கையில் ஜனநாயகத்திற்கு மிகமோசமான நாள் என ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர் ஜோர்ன் ரொஹ்டே தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.  இலங்கை பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

இன்றைய நாள் இலங்கையின் ஜனநாயகத்திற்கு மிக மோசமான நாள் என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கைக்கு என நீண்ட கால ஜனநாயக பாரம்பரியம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் மீது பொருட்களை வீசுவதும் வாக்களிப்பை தடுப்பதும் ஜனநாயகநாடொன்றிற்கு பொருத்தமான நடவடிக்கையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை இன்றைய சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள கனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் எந்த தனிநபரையும் விட வலிமையான  சுயாதீன அமைப்புகள் ஜனநாயகத்திற்கு அவசியம் என  தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வருத்தத்திற்குரிய சம்பவங்களை பார்வையிட்ட பின்னரே டுவிட்டரில் இதனை பதிவுசெய்துள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு பாலங்களை கட்டியெழுப்புவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment