இ
லங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பியல் திஸாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.
சந்தேகநபருக்கு பிணை வழங்குவது சம்பந்தமாக அன்றைய தினம் அறிவிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் இடம்பெறுவதனால் சந்தேகநபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.
இங்கிலாந்து அணியுடனான போட்டித் தொடரிற்கான ஔிபரப்பு உரிமத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுமார் 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி செய்ய முற்பட்டமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளார்.

