கட்சி திரும்பியமைக்கான முக்கிய காரணத்தை வெளியிட்ட மனுஷ

293 0

ஜனநாயகத்துக்காக உண்மைக்காகவும் முன்னிற்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வு இன்று முடிவடைந்த பின்னர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் அறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

கடந்த இரண்டுவாரங்களுக்கு முன்னர் கறுப்பு வெள்ளிக்கிழமை ஜனநாயக விரோத முறையில்  பிரதமர் மற்றும் அமைச்சரவையை நீக்கி, ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்விடுத்து, மக்கள் ஆணை, பெரும்பான்மை தொடர்பில் எந்தவகையிலும் சிந்திக்காமல் மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை எடுத்தேன்.

அதன் பிரகாரம் இந்த அரசாங்கத்தின் அமைச்சுப் பதவியில் இருந்து விலகி, ஜனநாயகத்துக்காக உண்மைக்காகவும் முன்னிற்க வேண்டும் என்று இந்த தீர்மானத்தை நான் எடுத்தேன்.

அத்துடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை ஏற்படுத்திக்கொள்ள முடியாமல்போகும்போது அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களை கோடிக்கணக்கில் வாங்கும் வெட்கப்படும் செயலை எதிரணியினர் மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

அவ்வாறு செயற்பட்டும் இவர்களால் 113 என்ற பெரும்பான்மையை ஏற்படுத்திக்கொள்ள முடியாமல்போனமையால்தான் பாராளுமன்றத்தை கலைக்க தீர்மானம் எடுத்தனர்.

பாராளுமன்றத்தை கலைக்க எடுத்த தன்னிச்சையான, அரசியலப்புக்கு முரணான செயற்பாட்டுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் பாராளுமன்றம் கூட்ட வாய்ப்பு கிடைத்தது.

அதன்மூலம் திருட்டுத்தனமாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தை விரட்டியடித்து மக்கள் ஆணையால் நியமிக்கப்பட்ட அரசாங்கம் தொடர்ந்து செயற்பட பாராளுமன்றம் தீர்மானிக்க முடிந்த என்றார்.

Leave a comment