பொலிஸ் மா அதிபருக்கு முன்னாள் பிரதமர் வேண்டுகோள்

359 0

அரசியலமைப்புக்கு ஏற்பவும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமையவும் செயலாற்றுமாறு  சகல அரச ஊழியர்களையும் தான் கேட்டுக் கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாளை கூடவுள்ள பாராளுமன்றத்துக்குரிய ஏற்பாடுகளை சபாநாயகருடன் கலந்துரையாடுமாறு பொலிஸ் மா அதிபரைத் தான் கேட்டுக் கொள்வதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் கேட்டுக் கொண்டார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து இன்று மாலை நடாத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

Leave a comment