தீபாவளி பண்டிகை – சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.2.72 கோடி வருவாய்

245 0

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.2.72 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகைக்கு 36 சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்கியது. 20 சுவிதா ரெயில்களும், 16 சிறப்பு கட்டண ரெயில்களும் இயக்கப்பட்டன.

இதில் சென்னையில் இருந்து தென் தமிழகத்துக்கு சில ரெயில்களும், கோவை, எர்ணாகுளம், ஹவுரா உள்ளிட்ட இடங்களுக்கு சில ரெயில்களும் இயக்கப்பட்டன. இந்த அனைத்து சிறப்பு ரெயில்களிலும் 100 சதவீத டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு இயக்கப்பட்டன.

இந்த சிறப்பு ரெயில்களில் 27 ஆயிரத்து 80 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் தெற்கு ரெயில்வேக்கு ரூ.2.72 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment