டெங்கு கொசுப்புழு ஆய்வு – 1,921 நிறுவனங்களுக்கு அபராதம்

244 0
விருதுநகர் செந்திரகுமார நாடார் கல்லூரி வளாகங்களில் கலெக்டர் சிவஞானம் டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகிறதா என்பதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கல்லூரி வளாகங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திற்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக அரசு அலுவலர்கள், அனைத்து நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொது இடங்கள், வீடுகள், கல்லூரி வளாகங்கள், பள்ளி வளாகங்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள், அரசு கட்டிடங்கள், மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். 1,921 இடங்களில் லார்வா புழுக்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டதுடன் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்த அந்த நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 750 அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.

Leave a comment