இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டுள்ள 13 இலங்கையர்கள்

283 0

இலங்கையர்கள் 13 பேர் இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வாரங்களாக அவர்களது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தின் பின்னர் அவர்கள் 13 பேருக்கும் மரண அச்சுறுத்தல்கள் இருந்ததாகவும் அதனால் பாதுகாப்பு நோக்கத்திற்காக சுற்றுலா விசாவில் இஸ்ரேலுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் பென்-குரியன் விமான நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் அவர்களுக்கு இல்லாத காரணத்தினால் அவர்களுக்காக முன்வந்த ஒருவர் உட்பட 11 பேரும் இரு பெண்களும் இஸ்ரேல் தடுப்பு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இரண்டு வாரங்களாக அவர்களது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு ஆடை மாற்றுவதற்கோ தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதற்கோ வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவர்களுக்கு மருத்து வசதிகள் வழங்கப்படவில்லை எனவும் சிறுநீரக நோய்குள்ளான நபர் ஒருவருக்கு நோய் நிலமை அதிகரித்து வைத்தியசாலைக்க அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்களை சிறைக்கு அழைத்து செல்லும் போது அதில் ஒருவர் இஸ்ரேலில் உள்ள இலங்கையர் ஒருவருக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் இவர்கள் 13 பேரையும் வழங்கறிஞர் ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மனுக்கள் மீதான விசாரணை நாளை (13) காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவற்றுள் 10 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன் ஏனைய நான்கும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தது.

குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தத்தின் அடிப்படையில் இவ்வாறு பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment